Asianet News TamilAsianet News Tamil

வெற்றிவாகை சூடிவந்த ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு..!! கூடி வந்து அஞ்சலி செலுத்திய கிராமமக்கள்..!!

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய ஜல்லிகட்டில் சிறப்பு பரிசு என பல்வேறு பரிசுகளை பெற்று வெற்றிவாகை சூடி வந்தது. மேலும் இந்த ஜல்லிகட்டு காளை சிறப்பாக  சீறி விளையாடுவதால் இந்த காளைக்கென தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.
 

jallikattu bull died - village people's final respect that bull at Madurai
Author
Madurai, First Published Dec 23, 2019, 1:01 PM IST

மேலூர் அருகே பல்வேறு ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றிவாகை சூடி உயிரிழந்த ஜல்லிகட்டு காளைக்கு  ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்  இறுதிமரியாதை செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் அம்மச்சி அம்மன் அருவிமலை கருப்பணசாமிக்கு சொந்தமான கோயில் காளை வளர்க்கப்பட்டு வந்தது. 

jallikattu bull died - village people's final respect that bull at Madurai

இது தமிழகத்தின் புகழ்பெற்ற ஜல்லிகட்டுகளான அலங்காநல்லூர், பாலமேடு, விராலிமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்று புல்லட், இருசக்கர வாகனம், தங்ககாசு, விராலிமலையில்  அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய ஜல்லிகட்டில் சிறப்பு பரிசு என பல்வேறு பரிசுகளை பெற்று வெற்றிவாகை சூடி வந்தது. மேலும் இந்த ஜல்லிகட்டு காளை சிறப்பாக  சீறி விளையாடுவதால் இந்த காளைக்கென தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. 

jallikattu bull died - village people's final respect that bull at Madurai

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று அக்காளை உயிரிழந்ததையடுத்து மனிதர்களுக்கு  எவ்வாறு இறுதி அஞ்சலி செலுத்தபடுகின்றதோ அது போல இறுதி அஞ்சலி கிராமத்தில் செலுத்தப்பட்டது. ஏராளமான சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் உயிரிழந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் பெண்கள் ஒப்பாரி வைத்தும் வாண வேடிக்கை முழங்க அப்பகுதியில் காளை அடக்கம் செய்யப்பட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios