தமிழ்நாட்டில் 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுக்கூடல்கள், தேவாலய வழிபாடுகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனவே முக்கியமான கோவில் திருவிழாக்களை மக்கள் காண முடியாமல் போனது. வெறும் பூஜைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்நிலையில், நாளை மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. 

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நடைபெறவுள்ளது. ஊரடங்கால் பக்தர்கள் அதைக்காண முடியாது என்பதால், திருக்கல்யாணத்தை பக்தர்கள் இணையத்தில் காண அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, நாளை காலை 8.30 மணியிலிருந்து 10.15 மணி வரை திருக்கல்யாண நிகழ்வுகளை www.tnhrce.gov.in, www.maduraimeenakshi.org/live-webcast/ ஆகிய இணையதளங்களில் ஒன்றில் காணலாம்.