அரசுப்பணிகளில் இருப்போர், 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப்பணிகளில் இருப்போர், 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையை சேர்ந்த தேன்மொழி என்பவர் கணவரின் ஓய்வூதிய பலன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். 

மேலும், ஓய்வூதிய பரிந்துரைக்கு வரும் ஆவணங்களை முறையாக சரிபார்த்து ஒப்புதல் வழங்கவேண்டும். மனுதாரரின் கணவர் ஒரு காவல் அதிகாரி. ஆனால், 2-வது திருமணம் செய்துகொள்வது குற்றம் என தெரிந்துகொண்டே தவறு செய்துள்ளார். இரண்டு திருமணங்களை புரிவது நன்னடத்தை ஆகாது. அது குற்றமும் கூட. 

எனவே, அரசுப்பணிகளில் இருப்பவர்கள் முதல் மனைவி இருக்கும் போது 2-வது திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தேவைப்படும் பட்சத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்ய பரிசீலனை செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.