மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர் பாலியல் தொழில் தற்போது சிறு நகரங்களிலும் தங்களது வலையை விரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மதுரையில் காவலருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பி ரேட் பேசிய மசாஜ் சென்டர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் பாலியல் தொழில்கள் பதுக்கமாக நடந்து வருகிறது. மும்பை போன்ற நகரங்களில் பாலியல் தொழிலுக்காகவே ரெட் லைட் என்று நேரடியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாலியல் தொழிலுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும், வெளியில் மசாஜ் சென்டர் போல காண்பித்து உள்ளே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், மதுரையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவலராக பணியாற்றி வருபவர் பழனிகுமார். இவரது எண்ணிற்கு LOCANTO App மூலம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமா என்று ஆசை வார்த்தை கூறி மெசேஜ் ஒன்று வந்தது. அதில், ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரமும், இரவு முழுவதுமென்றால் 12 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளரைப் போல் பேசிய அந்த போலீசார், மசாஜ் சென்டர் இயங்கி வரும் இடத்தின் முகவரியையும் வாங்கியுள்ளார்.

பின்னர் சக போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, பாலியல் கும்பல் சொன்ன இடத்திற்கு பழனிகுமார் சென்றுள்ளார். அங்கு அய்யனார், சேகர், மனோஜ்குமார், நந்தினி உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வரும் இவர்கள் வாடியாளர்களை மிரட்டி பணம் மோசடி செய்துவந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.