Asianet News TamilAsianet News Tamil

பொதுவெளியில நல்ல கழிவறை கட்டி கொடுங்க-சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தமிழகத்திலுள்ள பஸ்நிலையங்கள்,ரயில் நிலையங்கள் போன்ற பொது வெளிகளில் இலவச கழிவறைகளை கட்டி தரக்கூடிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது.

free toilet court order
Author
Madurai, First Published Mar 2, 2019, 5:37 PM IST

தமிழகத்திலுள்ள பஸ்நிலையங்கள்,ரயில் நிலையங்கள் போன்ற பொது வெளிகளில் இலவச கழிவறைகளை கட்டி தரக்கூடிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது.

 free toilet court order

கரூரை சேர்ந்த சரவணன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியதாவது:

”சுகாதாரமான இலவச கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துவதற்காக கட்டி தரவேண்டும் என உள்ளாட்சி,நகராட்சி அமைப்புகளில் சட்டமாக உள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் அப்படி இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவைகள் 5 முதல் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் வசூலிக்கும் கழிவறைகளும் சுத்தமானதாக இல்லை. இதனால் பல வியாதிகள் பொதுமக்களுக்கு வருகிறது. திருப்பதி தேவஸ்தானம், டெல்லி போன்ற இடங்களில் சுத்தமானதாக கழிவறைகள் இருக்கிறது. அதுபோன்ற ஒரு கழிவறைகளை கூட தமிழக பஸ்நிலையங்களில் காண முடியவில்லை. மேலும் தமிழகத்தில் குறைந்த விலையில் ஒப்பந்தம் எடுத்து அதிகமாக சம்பாதிக்கும்  ஒப்பந்தாரர்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் நல்ல சுகாதாரமான கழிவறையை கட்டித்தர உத்தரவிடவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய மாநில அரசுகள் இது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios