விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ரத்தா..? மின்சார வாரியம் விளக்கம்..!
விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மின்மீட்டர் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிரிச்சி அடைந்தனர். மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
புதிய விவசாய மின்சார இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்தப்படும் நிலையில் இதனால் இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படாது என மின்சாரத்தறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் முதன்முதலாக கடந்த 1984ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் 1990ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி, பெரு விவசாயிகளுக்கும் அதாவது அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார். இதற்கிடையே, எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் விவசாயிகளுக்காக கொண்டு வந்த இந்த இலவச மின்சார திட்டத்திற்கு சமாதி கட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மின் பகிர்மானம், கட்டணம், மின் உற்பத்தி என நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதனால், விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மின்மீட்டர் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிரிச்சி அடைந்தனர். மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என கூறியுள்ளது. மேலும், விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என கணக்கிடவே மின்மோட்டார்கள் பொருத்தப்படுகிறது. இலவச விவசாய மின் இணைப்பு தரும் போது மீட்டர் பொருத்துவது கடந்த 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக மின்சாரத்தறை அமைச்சர் தங்கமணியும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவது ரத்து செய்யப்பட மாட்டாது. தமிழகத்தில் உள்ள எந்த விவசாயிகளும் இலவச மின்சாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.