Asianet News TamilAsianet News Tamil

AIADMK: கருவாடு மீன் ஆகாது; அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - உதயகுமார் சாடல்

கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது அதே போல் சசிகலாவுக்கு அதிமுக.வில் மீண்டும் இடம் கிடையாது என ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

former minister rb udhayakumar slams vk sasikala in madurai vel
Author
First Published Jul 18, 2024, 2:03 PM IST | Last Updated Jul 18, 2024, 2:03 PM IST

மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இன்றைக்கு சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேச முயன்றால் தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் அவலங்களை SAY NO TO DRUGS  - SAY NO TO DMK, RESIGN STALIN, என்ற தலைப்பில்  கள்ளச்சாராயம்,போதை பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் பட்டி தொட்டி எங்கும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழகத் தொண்டர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். 

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்துகிறார்கள். உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், நியாயப்படுத்துகிறார்கள். 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அதிமுக அரசு. மரக்காணம் பகுதியில் 2023 ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலி அன்று இது போன்ற சம்பவம் நடைபெறாது என்றார். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது. கண்டிக்க தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என கூறும் ஸ்டாலின் ஆடதெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஸ்டாலினால் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதே அதிகாரிகளை வைத்து தான் அதிமுக ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக வைத்திருந்தோம்.

3வதும் பெண் குழந்தையா? பச்சிளம் குழந்தைக்கு தந்தையே எமனாக மாறிய சோகம்

33 ஆண்டு காலம் அம்மாவுடன் (சசிகலா)இருந்தவர் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்.? உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்.? உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். 

இந்த இயக்கத்தை கபளீகரம் செய்து விடுவார்கள் என்று அம்மாவே அவர்களுடன் போராட்டம் செய்து தோற்றுப் போனார். தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும், அவர்களை சேர்க்க வேண்டும் என யாரும் கூறவில்லை. அவர்களை சேர்க்க யாரும் விரும்பவில்லை. அவர்கள், இவர்கள் இருந்தால் தான் வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் The iron man of tamilnadu எடப்பாடியார் என்றார்.

கறந்த பால் மடி போகாது, கருவாடு மீன் ஆகாது. அதேபோல் அவர்கள் யாரும் விரும்பவில்லை அதிமுக தொண்டர்கள் கவனமுடன், விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 17.10.1972 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் மக்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சியில் 50 ஆண்டுகளில் சாமானிய கிளைகழக செயளாராக இருந்து புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆசியால் மக்கள் ஆதரவோடு எடப்பாடியார் நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவர் தான் மீண்டும் முதல்வராக  வரவேண்டும் என மக்கள் நினைத்தார்கள் யாரது பார்த்த உள்ளடி வேளையில் ,42 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்கு பெற்று இருந்தாலே மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் வந்திருப்பார் ஆனால் ஆனால் அவர் வரக்கூடாது என்று யார் உள்ளடி வேலை பார்த்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

நாளை வெளியாகிறது அமைச்சரவை மாற்ற அறிவிப்பு.? யார் யாருக்கு பதவி.? யாரெல்லாம் அமைச்சரவையில் இருந்து நீக்கம்.?

எடப்பாடியார் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள், நீதிமன்றங்களுக்கு, தேர்தல் ஆணையத்திற்கு சென்று கட்சியை மீட்டு, கொடியை மீட்டு வலிமையான இயக்கத்தையே உருவாக்கினார்.தொண்டர்கள் எடப்பாடியார் உடன் நின்ற காரணத்தினால் அதிமுக முழுமையோடு எடப்பாடியார் வழி நடத்துகிறார் 2 கோடி தொண்டர்கள் இன்றைக்கு  சுதந்திர சுவாச காற்றை சுவாசிக்கின்றனர்.

கல்வியிலே, பொருளாதாரத்தில் பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர். அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். அவர்களுக்கு என்ன முயற்சி எடுத்தார் என்பதை சொல்லத் தயாரா? இந்த பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர இந்த மக்களுக்கு ஒரு செம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை? மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை., ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும். 

அதிமுக மூத்த முன்னோடிகள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்.?  அம்மா காரணம் இல்லை இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள (சசிகலா)தான் காரணம் .ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலாபயணம் சென்று இருக்கிறார். கண் கெட்டப்பிறகு சூரியன் நமஸ்காரம் என்பது போல உள்ளது

அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும் ஆனால் எதுவும் செய்யவில்லை. காலமும் அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா..? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் மக்களும் உங்களிடம் ஏமாற தயாராக இல்லை

எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அவர்கள் கையில் எந்த அளவிற்கு அதிகாரம் இருந்தது என்று. அவர்களால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கீரர்களா.? யார் இருந்தாலும் எச்சரிக்கைகளோடு இருக்க வேண்டும். பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயமாக பகல் கனவாக தான் போகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும். 

கடந்த 2021 தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்.? இதில் எதை ஏற்றுக்கொள்ளவது? மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்

ஜானகிஅம்மாள்  அவர்கள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடியார் கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும். எடப்பாடியார் முதலமைச்சராக வேட்பாளராக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தார்கள் சட்டப்பேரவை பெரும்பான்மை வந்த பொழுது அவருக்கு ஆதரவு அளித்தார்கள்

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமராக மோடியும் ராகுலையும் முன்னுறுத்தி தேர்தலை சந்தினர் நாங்கள் தமிழகத்தின் உரிமையை பிரச்சனையை  முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தோம் ஆனால் மக்கள் பிரதமருக்காக தேர்தலில் வாக்களித்தார்கள் இதில் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் வரும் சட்டமன்றத் தேர்தலில முதலமைச்சர் வேட்பாளராக  எடப்பாடியாரை முன் நிறுத்தி களம் காண்போம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய ஆன்மா எங்களை காப்பாற்றும் எடப்பாடியார் இன்றைக்கு அம்மாவின் வழியில், புரட்சித்தலைவர் வழியில் சமதர்ம வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்

மீண்டும் 2026 தேர்தலில் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் வருவார் அவருக்கு இரண்டு கோடி தொண்டர்களும் மக்கள் ஆதரவும் உள்ளது அவர் முதலமைச்சர் ஆவதை எந்த கொம்பனாலம் தடுக்க முடியாது என கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios