அதிரடியாக உயர்த்தபட்ட மின்கட்டணம்..! புதிய விலை நடைமுறைக்கு வந்தது..!

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.

fees increased for electrical connection

தானே, கஜா போன்ற புயல் பாதிப்புகளால் கடும் நிதி நெருக்கடியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மின் இணைப்பு மற்றும் பல்வேறு சேவை கட்டணங்களை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மின்சார வாரியம் மனு அளித்தது. இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை மின்சார ஆணையம் நடத்தியது. இதில் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

fees increased for electrical connection

மின் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இதனால் அரசு இதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் இணைப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

fees increased for electrical connection

அதன்படி வீடுகளுக்கு வழங்கப்படும் தாழ்வழுத்த மின் இணைப்பைப் பெறுவதற்கு தற்போது கட்டணம் 500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக இது 250 ரூபாயாக இருந்தது. அதேபோல மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் 750 லிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பொது குடிநீர் இணைப்பு பொது பயன்பாட்டு விளக்குகளுக்கான கட்டணம் 250 இல் இருந்து 500 ஆக உயர்ந்துள்ளது. அதே பிரிவில் மும்முனை இணைப்பு பெறுவதற்கான கட்டணம் 500 லிருந்து 1000 ரூபாய் வரையில் ஏற்பட்டிருக்கிறது.

fees increased for electrical connection

அதேபோன்று வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், குடிசை தொழில்கள், விசைத்தறி கூடங்கள் போன்றவைகளுக்கும் புதிய கட்டணம் 1000 ரூபாய் வரை அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் 200 லிருந்து 300 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு அனைத்தும் நேற்றிலிருந்து அமலுக்கு வந்திருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios