மதுரை மாவட்டம் கூடல் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் தாரா என்கிற நாயை வளர்த்து வருகின்றனர். புல்லி குட்டா இனத்தை சேர்ந்த அந்த நாய் பல வருடங்களாக அக்குடும்பத்தினருடன் மிகவும் பாசத்துடன் இருந்து வந்துள்ளது. வீட்டிற்கு வருகை தரும் வெளி நபர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழையவிடாமல் வீட்டை காவல் காத்து அரணாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்தபோது வழக்கத்திற்கு மாறாக நாய் குரைத்துக் கொண்டு அங்கும் இங்கும் தாவி ஓடி இருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் வந்து பார்த்தபோது கார் நிறுத்தி இருக்கும் அருகே நாய் சென்று விடாமல் குரைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி காரின் அருகே குடும்பத்தினர் யாரையும் வரவிடாமல் தடுத்த நாய் தொடர்ந்து குரைத்திருக்கிறது. அப்போதுதான் அங்கே கட்டுவிரியன் பாம்பு ஒன்று இருப்பதை குடும்பத்தினர் கண்டனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாம்பை அடிக்க முற்பட்டபோது அந்த நாய் பாம்புடன் சண்டையிடத் தொடங்கியது.

உலகை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்..?

இதில் நாயை கட்டுவிரியன் பாம்பு பல இடங்களில் தீண்ட நாய்க்கு விஷம் ஏறியது. ஆனாலும் தொடர்ந்து விடாமல் போராடிய நாய் பாம்பை கடித்து குதறி கொன்றது. இதையடுத்து உடனடியாக நாயை மீட்ட குடும்பத்தினர் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்கு நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அது கோமா நிலைக்கு சென்றுள்ளது. அதனால் குடும்பத்தினர் சோகத்துடன் அதனை பாதுகாத்து வருகின்றனர். தன்னை வளர்த்த குடும்பத்திற்காக உயிரையும் விடத் துணிந்து போராடிய நாயின் நன்றியுணர்வு ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.