எய்ம்ஸ் எங்கே? செங்கல்லுடன் போராட்டத்தில் குதித்த திமுக கூட்டணி கட்சிகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது வரை கட்டுமானப் பணிகள் கூட தொடங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரையில் போராட்டம் நடத்தப்பட்டது.

dmk alliance parties stage protest to release budget for aiims hospital in madurai

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. தற்போது வரை முழுமையான பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.

தூத்துக்குடியில் ஹெராயின் என்று கூறி இளைஞர்களிடம் யூரியாவை விற்ற வாலிபர் கைது

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி வருவது தாமதமாகும் நிலையில், மத்திய அரசு தனது பங்கீடான ரூ.400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை, பழங்காநத்தம் பகுதியில்  தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.         

குடியிருப்பு பகுதியில் கார் ஓட்டி பழகியபோது விபரீதம்; சைக்கிளில் சென்ற சிறுவன் பலி

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, எம்.எல்.,ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், மற்றும். காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல்லை ஆளுக்கொன்றாக தூக்கிக் கொண்டு கோஷம் எழுப்பினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios