தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4034ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், கொரோனா மரணத்தை அரசு தொடர்ந்து மறைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் சென்னையைப் போல மாவட்டங்களிலும் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னையில்  கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக  எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை அமைத்தது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி மார்ச் 1ம் முதல் ஜூன் 3ம் தேதி வரை விடுபட்ட 444 மரணங்கள் கொரோனா பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறும் மரணங்கள் தொடர்பான தினசரி அறிக்கை பெற்று ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைத்து தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.  இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக தமிழகத்தில் 99 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,034 நாளாக உயர்ந்துள்ளது. இதில் 99 மரணங்களில் 20 மரணங்கள் பல நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. இதில் 10 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். இந்த மரணங்கள் தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை நேற்றைய தினசரி அறிக்கையில் சேர்த்துள்ளது.  

மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

அரியலூர் - 7
செங்கல்பட்டு - 253
சென்னை - 2,140
கோவை - 64
கடலூர் - 34
தர்மபுரி - 4
திண்டுக்கல் - 53
ஈரோடு - 9
கள்ளக்குறிச்சி - 25
காஞ்சிபுரம் - 112
கன்னியாகுமரி - 45
கரூர் - 9
கிருஷ்ணகிரி - 14 
மதுரை - 247
நாகை - 8
நாமக்கல் - 6
நீலகிரி - 2
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 25
ராமநாதபுரம் - 66
ராணிப்பேட்டை - 33
சேலம் - 33
சிவகங்கை - 43
தென்காசி - 23
தஞ்சாவூர் - 28
தேனி - 63
திருப்பத்தூர் - 16
திருவள்ளூர் - 246
திருவண்ணாமலை - 62
திருவாரூர் - 9
தூத்துக்குடி - 48
திருநெல்வேலி - 44
திருப்பூர் - 11
திருச்சி - 60
வேலூர் - 63
விழுப்புரம் - 35
விருதுநகர் - 90