மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரம்: புதிய படங்கள் வெளியீடு!

950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக உள்ளது. இந்நிலையில் தீவிரமாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் படங்களை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Construction of Building & Site Development at AIIMS Madurai sgb

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதைக் காட்டும் புதிய புகைப்படங்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி மதிப்பீட்டில் ஜெய்கா என்ற ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் 2021ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகை, அதாவது ரூ.1627.70 கோடியை ஜெய்கா நிறுவனம் கடனாக வழங்கும். எஞ்சிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இதன்படி, தொடங்கிய கட்டுமானப் பணி சுற்றுச்சுவருடன் நின்றுபோனது. 5 ஆண்டுகளாக எந்த வேலையும் நடக்கவில்லை.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் செய்முறை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக தற்காலிகமாக விடுதி, வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

நீண்ட காலத்துக்குப் பிறகு மார்ச் 4ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை L&T நிறுவனம் ஆரம்பித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சமன் செய்து வாஸ்து பூஜை போடப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனத் தகவல் வெளியானது.

950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக உள்ளது. இந்நிலையில் தீவிரமாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் படங்களை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோ மீட்டர் சாலை போடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios