கல்யாணத்தை வைச்சுக்கிட்டு பாவம் நந்தினியை வெளியே விடுங்க... சிபிஐ வேண்டுகோள்..!


போராட்டவாதியான நந்தினியை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. 

CBI demands release of Nandini

போராட்டவாதியான நந்தினியை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. 

மதுவிற்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் நந்தினி. இவருக்கு பக்க பலமாக தந்தையும் களத்தில் இறங்கி போராடி வருகிறார். இதற்காக பலமுறை இவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. CBI demands release of Nandini

கடந்த 2014ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிரான போராடிய வழக்கில், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி, நேரில் ஆஜராகி, போதைப் பொருள் விற்பது மிகப்பெரிய குற்றம் என்று நீதிபதியிடமே விவாதித்தார். இதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டு வரும் 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. வரும் 5-ம் தேதி நந்தினிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. CBI demands release of Nandini

இந்தச்சூழலில் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பிற்கு ஆளாக்கி உள்ளது. நந்தினியை விடுதலை செய்யக்கோரி, சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக்குகளும் வலம் வருகின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். CBI demands release of Nandini

அதில், மதுவிற்கு எதிராக போராடுபவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அடிப்படை தேவைகளுக்கு கூட போராட அனுமதி மறுக்கப்படுகிறது. திருமண நிகழ்வு நடைபெறும் வேளையில், நந்தினியை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios