ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; இனி குடிநீர் கேன் எடுத்துவர தடை
மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறைதீர் கூட்டத்தில் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் எதிரொலியாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் குடிநீர் தவிர்த்து கேன்களில் எந்த பொருளும் எடுத்துவரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டமானது நடைபெறும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குறைதீர் கூட்டத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் சிலர் தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனக் கூறி பெட்ரோல், மண்ணெண்ணைய் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தீக்குளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்தனர்.
இந்தநிலையில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குறைதீர் கூட்டத்திற்கு வரக்கூடிய அனைத்து தரப்பினரும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய வாகனங்கள் மற்றும் கைப்பைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தபடுத்தப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகின்றனர். வாகனங்களில் தண்ணீர் பாட்டில் தவிர்த்து, ஆயில், மருந்துகள் போன்ற எந்தவகையான பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஓட ஓட வெட்டி கொலை
மேலும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் மனு அளிக்க வரக்கூடிய தலா 5 நபர்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறைதீர் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நெல்லையில் அரசு கல்லூரியில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
இதில் ஏராளமான தாய்மார்கள் பச்சிளங்குழந்தைகளுடன் வருகை தரும் நிலையில் பாலூட்டும் தாய்மார்கள் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதரும் போது பாலூட்டும் அறை இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலூட்டும் அறை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.