மதுரை காவல்துறை கட்டுப்பாடு அறையை தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் மதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான். இதனால் அதிர்ச்சி அடைத்த போலீசார் மதுரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன. எனினும் தற்போது வந்திருக்கும் வெடிகுண்டு மிரட்டலால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் மர்ம நபர்களின் வேலையாக இது இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகின்றனர். தொலைபேசி அழைப்பு வந்த எண்ணை வைத்து அதில் பேசிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: கோலாகலமான போகி..! சென்னையில் கடும் புகைமூட்டம்..!