அரசியல் கட்சியினருக்கு கடிவாளம்... உயர்நீதிமன்றம் அதிரடி..!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக தடை விதித்துள்ளது.

Banners ban... madurai high court action

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக தடை விதித்துள்ளது. 

கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம், கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

 Banners ban... madurai high court action

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்காலான கொடி, பேனர்களை பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். Banners ban... madurai high court action

இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவால் அரசியல் கட்சியினரின் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios