Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வுக்கு படிக்க பணம் தேவைப்பட்டதால் வேலைக்கு சென்ற பெண்ணை கொடுமை படுத்தியுள்ளனர் - எவிடென்ஸ் கதிர் ஆதங்

சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்திரவதை நடைபெற்றுள்ளது. இங்கு என்ன அமைதிபூங்காவாக இருக்கிறது, காசை கொடுத்து எதையும் சரிசெய்து விடலாம் என அதிகார திமிறில் ஆளும்கட்சியினர் இருப்பதாக எவிடென்ஸ் கதிர் பேட்டி.

activist evidence kathir slams dmk government in madurai vel
Author
First Published Jan 19, 2024, 5:13 PM IST

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அலுவலகத்தில், சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் வீட்டிற்கு ஏஜெண்ட் மூலமாக மாதம் 16ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 17 வயதிலயே சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். இரண்டாவது நாளிலயே அடிக்க தொடங்கியுள்ளனர். மூன்று வேலையும் சமைத்து தர வேண்டும் என கூறி பல்வேறு பொருட்களை வைத்து கொடூரமாக தாக்கி கையில் சூடுவைத்து மிளகாய்பொடியை கரைத்து முகத்தில் ஊற்றி கொடுமைபடுத்தியுள்ளனர். சமூகநீதி, பெண்கள் நலன் பேசும் திமுகவினர் பெண் குழந்தையை வீட்டில் வைத்து அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். 

இப்போது கேட்டால் மகன் பண்ணியது எனக்கு தெரியாது எனக்கூறுவதற்கு எதற்கு அரசியலில் இருக்குறங்க, சிறுமியை எம்.எல்.ஏவின் மகன் மருகள் பாத்ரூமில் உடமைகளை வைத்து தங்க வைத்துள்ளனர். நீயும் நானும் ஒன்னா என சாதிய ரீதியாக கேட்டு ரேசன் அரிசியை சமைக்க வைத்து தனி சாப்பாடு மட்டும் சாப்பிடவைத்து கொடுமை படுத்தியுள்ளனர். நீட் எக்ஸாம் எழுதி படிப்பதற்காக கல்வி செலவுக்காக வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். 

திருச்சியில் பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த சக கல்லூரி மாணவர்கள்

சிறுமியை வீட்டிற்குள் பூட்டிவைத்து அடைத்து செல்போனை பறித்துவைத்துள்ளனர். அவர்களுடைய குழந்தையை சிரிக்கவைப்பதற்காக சிறுமியை ஆட வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். எம்எல்ஏவின் மருமகளும், மகனும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி எதையும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். கையில் சூடுவைத்த காயம் தெரியக்கூடாது என்பதற்காக கையில் மருதாணி போட்டு மறைத்துள்ளனர்.

காவல்துறையினருக்கு FIR பதிவு செய்யவிடாமல் தடுத்துநிறுத்தினர். வன்முறையை செய்துவிட்டு வாகனங்களில் வந்து ஊர்காரர்களை மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு மோசமாக கொடூரமான வன்கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்போது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார் சசிகலா

3.5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மாணவியின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும். மாதம் தோறும் 15 ஆயிரம் சிறுமிக்கு வழங்க வேண்டும். தவறிழைத்தவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பிணைக்கொடுக்க கூடாது. இது தமிழகத்திற்கு பெரும் அவமானம். நீட்டை பற்றி பேச தமிழக அரசுக்கு  என்ன தகுதி இருக்கிறது? முதலமைச்சர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டிக்கதக்கது என அறிக்கை கூட விடவில்லை.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். 3 ஆண்டுகளில் எடுத்த அனைத்து வன்கொடுமை வழக்குகள் மீதும் சந்தேகம் எழுகிறது. சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்திரவதை நடைபெற்றுள்ளது. இங்கு என்ன அமைதி பூங்காவாக இருக்கிறது? 17 வயது சிறுமியை எப்படி வீட்டு வேலைக்கு சேர்த்தார்கள்? ஒரு ரூபாய் கூட சம்பளம் தராமல் கொடுமை படுத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios