மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய கொள்ளை கும்பல்; சினிமாவை மிஞ்சிய சேசிங் சம்பவம்
மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் போலீசார் பின்தொடர்வதை அறிந்து சிறுவனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவருக்கு மதுரை பைபாஸ் சாலை பகுதியில் வணிக வளாகம், வீடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம்.
அதன்படி இன்று மாணவன் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற நிலையில், திடீரென ஆட்டோவை வழிமறித்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்த்து மாணவனையும் கடத்தி உள்ளனர். பின்னர் மைதிலி ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி பணம் கொடுத்தால் தான் உங்கள் மகனை விடுவிப்போம் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
“குடி அரசு” என்பதன் பொருள்; அப்போ புரியல, இப்போ தான் புரியுது - ராமதாஸ் விமர்சனம்
உடனடியாக சுதாரித்துக் கொண்ட தாயார் மைதிலி ராஜலட்சுமி கடத்தல் சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறிதும் தாமதிக்காமல் ஆய்வாளர் காசி தலைமையில் தனிப்படை அமைத்து சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை விரட்டிச் சென்றது.
ஓ.பி.எஸ்.ஐ ஜெயலலிதா அறிமுகப்படுத்தினாரா? டிடிவி இல்லையென்றால் பன்னீர்செல்வமே கிடையாது - ஜெயக்குமார்
காவல் துறையினர் தங்களை பின்தொடர்வதை அறிந்த கொள்ளையர்கள் உடனடியாக பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுவனை மீட்ட காவல் துறையினர், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரையில் சினிமா பாணியில் நடைபெற்ற ஆள்கடத்தல் சம்பவத்தில் 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட காவல் துறையினரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.