பிளாட்பாரத்தில் இடம் பிடிப்பதில் யாசகர்கள் இடையே தகராறு; தூங்கும் போது தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை
மதுரையில் யாசகர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தூங்கும் போது ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிலையில், கொலையாளியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்க்கரை (வயது 65) கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் அருகே நடைமேடையில் உறங்கி உள்ளார். மேலும் கட்டிட வேலை கிடைக்காத சூழலில் யாசகம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவரின் அருகே நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (43) என்பவர் உறங்கியுள்ளார்.
வைகாசி விசாகப் பெருவிழா; பழனி திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
அப்போது சர்க்கரை பீடி குடித்தபோது முருகனும் பீடி கேட்டுள்ளார். அப்பொது முருகனை சர்க்கரை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரமடைந்த முருகன் நள்ளிரவில் சர்க்கரை தூங்கிகொண்டிருந்த போது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். மேலும் உடலில் பெட்ரோலை ஊற்றி கொலை எரித்துள்ளார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு ரோந்து பணிக்கு சென்ற தல்லாகுளம் காவல்துறையினரை பார்த்து தப்பி ஓடிய முருகனை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே கோவில் அருகே ப்ளாட்பாரத்தில் உறங்கும் போது தூங்கும் இடத்திற்கு அடிக்கடி தகராறு வந்துள்ளது எனவும் பீடி குடித்தபோது அதனை கேட்டபோது ஆபாசமாக திட்டியதால் கொலை செய்துவிட்டதாகவும் முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரையில் ஒரு பீடிக்காக அருகில் படுத்து தூங்கியவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.