காதல் மயக்கத்தில் 26 வயது இளம்பெண் சிறுவனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரையை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளான். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 26 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் வயது வித்தியாசம் பார்க்காமல் நாளடைவில் காதலமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக வீட்டில் உள்ளவர்களுக்கும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவரும் தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் திடீரென மாயமாகி விட்டனர். இருவீட்டினரும் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காதலித்து வந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மற்றும் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். காதல் மயக்கத்தில் 26 வயது இளம்பெண் சிறுவனை அழைத்து சென்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.