Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலுடன் சிறுமி விபரீத முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த சிறுமி தனது காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

young love couple commit suicide in krishnagiri district vel
Author
First Published Aug 25, 2024, 6:36 PM IST | Last Updated Aug 25, 2024, 6:36 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கௌதாளம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (வயது 21). தச்சு வேலை செய்து வந்தார். இதனிடையே நரசிம்ம மூர்த்தி பச்சப்பன்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறமியும் அவரை காதலித்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நரசிம்ம மூர்த்தி மீது தனது மகளை கொடுமை படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நரசிம்ம மூர்த்தி மீண்டும் தனது காதலியை சந்தித்து பேசி உள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

மூட்டை மூட்டையாக கஞ்சா, பயங்கர ஆயுதம்; கல்லூரி மாணவர்கள் அறையில் பயங்கரம் - போலீஸ் அதிர்ச்சி

இதனால் இருவரும் மனவேதனை அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கல்லூரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்ட மாணவி கல்லூரிக்கு செல்லாமல் நரசிம்ம மூர்த்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக சிறுமியை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் நரசிம்ம மூர்த்தியின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.

பரபரப்பான சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட யூடியூபர்; லைக்குக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் நிலை

அப்போது வீட்டினுள் கால் ஜோடி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios