தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பான சாலையில் பிரபல யூடியூபர் ஒருவர் ரீல்ஸ் வீடியோவுக்காக சாலையில் பணத்தை பறக்கவிட்டு வீடியோ எடுத்த நிலையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பிரபல யூடியூபர் பவர் ஹர்ஷா தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரின் பரபரப்பான சாலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக கட்டுக் கட்டாக பணத்தை பறக்க விட்டுள்ளார். இதனால் சிதறிய பணத்தை எடுக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் முன்டியடித்துக் கொண்டு சாலையில் குவிந்தனர். பரபரப்பான சாலையில் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Scroll to load tweet…

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் யூடியூபர் ஹர்ஷா மகாதேவை கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

'ஒரு சமூகத்தின் உயிர்வலி' மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று வாழ்த்திய எம்.பி திருமாவளவன்

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.