Asianet News TamilAsianet News Tamil

கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்… மேலும் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி!!

கரூரில் விஷவாயு தாக்கி ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

one more body has been recovered in karur gas attack accident
Author
First Published Nov 17, 2022, 7:55 PM IST

கரூரில் விஷவாயு தாக்கி ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவர் கட்டி வந்த புது வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டதை அடுத்து அதில் மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய தொழிலாளர்கள் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களை விஷவாயு தாக்கியுள்ளது.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம்; தமிழ்நாட்டு பிரதிநிதிகளை பனாரஸில் வரவேற்கிறார் பிரதமர் மோடி!!

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற சிவகுமார் என்பவரும் விஷவாயு தாக்குதலுக்குள்ளானார். இதில் மூவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரையும் மீட்டனர். இதுக்குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த கழிவு நீர் தொட்டியில் இருந்து மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோயிலில் குடும்பத்துடன் கொள்ளை… துரத்தி பிடித்து அடித்துக்கொன்ற கும்பல்… புதுக்கோட்டையில் பரபரப்பு!!

இதுக்குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சின்னமலைப்பட்டியை சேர்ந்த கோபால் என்பவரது உடல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சடலம் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios