துருக்கி இளைஞரை மணந்த கரூர் தமிழ் பெண்; தமிழ் முறைப்படி நடந்த திருமணத்தை வியப்புடன் பார்த்த உறவினர்கள்

துருக்கி இளைஞரை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தமிழ் பெண்ணுக்கு உறவினர்கள் வாழ்த்து மழை தெரிவித்து வருகின்றனர்.

karur woman married with turkey young man at traditional tamil method at karur

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது துருக்கி நாட்டை சார்ந்த எம்.டெக் பட்டதாரி இளைஞரான அஹமத் கெமில் கயான் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வரும் அந்த இளைஞருக்கும், பிரியங்காவிற்கும்  காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் அவர்களது திருமணம் குறித்து இரு வீட்டாரிடமும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் மணமகள் வீட்டில் எளிமையாக தமிழ் முறைப்படி நடைபெற்றது. 

அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் வீணாக்கப்பட்ட உணவு; குவியல் குவியலாக கீழே கொட்டி அழிப்பு

மாப்பிள்ளை அழைப்பு, தாலி கட்டுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. தமிழ் தெரியாத மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆங்கிலத்தில் ஒவ்வொரு நிகழ்வும் விளக்கப்பட்டு நடைபெற்றது. இதனை துருக்கியில் இருந்து வந்த அவர்களது உறவினர்கள் ஆர்ச்சரியத்துடன் பார்த்ததுடன், வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios