Asianet News TamilAsianet News Tamil

கரூர் மக்களவைத் தொகுதி யாருக்கு ஒதுக்க போறாங்களே தெரியல.. அதுக்குள்ள பரிசு பொருட்களை விநியோகிக்கும் திமுக!

நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

DMK distributes gifts in Karur Lok Sabha constituency tvk
Author
First Published Mar 8, 2024, 3:05 PM IST

கரூர் மக்களவை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? அல்லது திமுக போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வரும் நிலையில் திமுகவினர் வீடு வீடாக சென்று பரிசு பொருட்கைள விநியோகித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: 3 தொகுதிகள் கேட்ட விசிக.! திமுக கொடுத்தது எத்தனை தெரியுமா? எந்த சின்னத்தில் போட்டி.! தொகுதிகள் விவரம்!

DMK distributes gifts in Karur Lok Sabha constituency tvk

இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ஜோதிமணி வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். இந்த முறை கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? அல்லது திமுக மீண்டும் போட்டியிடுமா?  என்பது இரு கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை நிலவி வருகிறது. 

DMK distributes gifts in Karur Lok Sabha constituency tvk

இந்நிலையில்  நாடாளுமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் 2024 பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் என குறித்த துண்டு பிரசுரங்கள் அடங்கிய அட்டைப்பெட்டியில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறிக்கப்பட்ட அட்டைப் பெட்டியில் சில்வர் சம்படம் வீடு வீடாக கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் கிடங்காக மாறிய தமிழகம்... திமுகவுக்கு எதிராக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்..!

DMK distributes gifts in Karur Lok Sabha constituency tvk

இதில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் சில்வர் சம்படம் அடங்கிய பரிசு பெட்டியில் இல்லத்தரசிகளை கவரும் வகையில் டாட்டா ஏசி வாகன மூலம் வீடு தோறும் சென்று பரிசு பொருளை வழங்கி வருகின்றனர். சிறையில் இருந்தாலும் அவரது தேர்தல் பரிசு பொருள் இல்லத்தோடும் சென்று விடனும் என்று எண்ணத்தை அவரது ஆதரவாளர்கள் நிறைவேற்றி வருகின்றனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் பரிசு பொருள் அட்டப்பட்டியில் நான்கு சம்படம் இருக்கும் வகையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பொருளை எடுத்துக்கொண்டு மூன்று பொருட்கள் மட்டும் அந்த பரிசு பெட்டியில் வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios