3 தொகுதிகள் கேட்ட விசிக.! திமுக கொடுத்தது எத்தனை தெரியுமா? எந்த சின்னத்தில் போட்டி.! தொகுதிகள் விவரம்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஆளும் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதுவரை முஸ்லிம் லீக், கொமதேக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

Parliament Election 2024...DMK alliance seat sharing agreement with VCK tvk

மக்களவை தேர்தலில் திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஆளும் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதுவரை முஸ்லிம் லீக், கொமதேக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதையும் படிங்க: அப்பாடா.. ஒருவழியாக திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது! தனி சின்னத்தில் போட்டி!

Parliament Election 2024...DMK alliance seat sharing agreement with VCK tvk

இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 தனித்தொகுதி, ஒரு பொதுத்தொகுதியை கேட்டிருந்தது. குறிப்பாக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆனால், திமுக தரப்பில் 2 தனித்தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக கூறிவிட்டனர். இதனால் திமுக விசிக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 

இதையும் படிங்க:  யூடர்ன் அடித்து திமுக பக்கம் திரும்ப போகிறதா பாமக? அதிர்ச்சியில் அதிமுக.! பாஜக.!

Parliament Election 2024...DMK alliance seat sharing agreement with VCK tvk

இந்நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்கு பிறகு திமுக - விசிக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்: விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios