கரூரில் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை துடிதுடித்து பலி
கரூர் மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன், மோகனா தம்பதியர். இவர்களுக்கு 5 வயது மற்றும் ஒன்றரை வயதில் 2 ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வரும் மூத்த மகனை அவனது தந்தை அழைத்து வருவது வழக்கம்.
அந்த வகையில் மூத்த மகனின் வருகைக்காக தந்தை சரவணன் வீட்டின் அருகே காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது இளைய மகனான சாய் மிதுன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். விளையாட்டின் ஆர்வத்தால் பள்ளி வாகனத்தின் குறுக்கே சிறுவன் ஓடியுள்ளான், சிறுவனின் வருகையை எதிர் பாராத ஓட்டுநர் சிறுவன் மீது வாகனம் மோதியுள்ளது.
அதிமுகவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம் - டிடிவி தினகரன் விமர்சனம்
இந்த விபத்தில் சிறுவன் சாய் மிதுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தான். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கிய வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழனியாண்டவர் கோவிலுக்கு சொந்தமான இருவேறு கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்