அதிமுகவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம் - டிடிவி தினகரன் விமர்சனம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக தான் காரணம். பாஜக நினைத்தால் தான் பன்னீர் செல்வமும், பழனிசாமியும் ஒன்றிணைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தற்போது பல்வேறு சூழ்ச்சிகளின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி வருகிறார். இது மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை உள்ளடக்கியது. பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர், அவருக்கு தான் இரட்டை இலை என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அது அதிமுகவுக்கு பின்னடைவாகத் தான் இருக்கும்.
9ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு; கொலையில் முடிந்த பரிதாபம்
பழனிசாமி கையில் இருப்பதாலேயே அதிமுக பலவீனமடைந்து வருகிறது. வரும் காலத்திலே தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை கைப்பற்றும் நிலை வரும். துரோகத்தின் மூலம் பதவியை பிடித்துள்ள எடப்பாடி தரப்பினர் அதற்கான பதிலை நிச்சயம் சொல்ல வேண்டிய நிலை வரும்.
காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் பாஜகவில் தான் உள்ளனர் - கி.வீரமணி பேச்சு
5 ஆண்டுகளில் பெறக்கூடிய அனைத்து அவப்பெயர்களையும் திமுக தற்போதே பெற்றுவிட்டது. ஆளும் கட்சிக்கு நிகராக அதிமுக அனைத்து வியூகங்களையும் கையாண்டு, அவர்களுக்கு இணையாக செலவு செய்த நிலையிலும் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்பது யாரும் எதிர்பார்த்திடாத ஒன்று என விமர்சனம் செய்துள்ளார்.