குமரியில் தலை துண்டான நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு; உறவினர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

youngman suspected death in kanyakumari district

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரஸ்தக்காடு தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை தலை துண்டித்த நிலையில் கிடந்துள்ளது. இதை அப்பகுதியினர் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், உடனடியாக  அஞ்சுகிராமம் காவல் துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் காந்தி மடம் பகுதியைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரகாஷ் என்பதும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளாகி அவர்  இறந்திருக்கலாம், விபத்தில் தலை துண்டாக்கப்பட்டிருக்கறாம் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

பொது தேர்வில் குறைந்த மதிப்பெண்; அம்மாவுக்கு கடிதம் எழுதிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆனால் பிரகாஷின் தந்தை கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் தனது மகன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம். இது விபத்து அல்ல என கூறி உடலை வாங்க மறுத்து அஞ்சுகிராமம் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயம்; தங்க காசை தட்டிச்சென்ற சிறுவர்கள்

இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பிரகாஷ் ஐடிஐ முடித்துள்ளார். மேலும் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் அஞ்சுகிராமம் காணிமடத்தில் உள்ள  கோவில் நிகழ்ச்சிக்கு வந்த பிரகாஷ் நேற்று மர்மமான முறையில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios