Asianet News TamilAsianet News Tamil

Kanyakumari Murder Case: கன்னியாகுமரியை அலறவிட்ட தொழிலதிபர் கொலை வழக்கு; ஒருவர் அதிரடி கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காருக்குள் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை.

young man arrested related on businessman murder case in kanyakumari vel
Author
First Published Jun 26, 2024, 10:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் சொகுசு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்த போது காருக்குள் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரை திறந்து பார்த்தபோது  காருக்குள் ஒருவர் கழுத்து அறக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்; அதிமுக எம்எல்ஏ விடுதலை

காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போது உயிரிழந்து கிடந்த நபர் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தீபக் வீட்டில் இருந்து ரூபாய் 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஜேசிபி இயந்திரம் வாங்குவதற்காக சென்னைக்கு புறப்பட்டு வந்ததும், வரும் வழியில் தனது காரில் ஒருவரை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

மேலும்  காரில் வந்த நபர் பணத்திற்காக தீபுவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு வந்த நிலையில், இந்த கொலை வழக்கு  தொடர்பாக கேரள மாநிலம் நேமம் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் கடை நடத்திவரும் அம்பிளி என்கிற சதிக்குமாரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இது தனிப்படை போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மேல் விசாரணைக்காக, மார்த்தாண்டம் காவல்நிலையத்துக்கு டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று  அம்பிளி என்கிற சதிக்குமாரை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios