கொடுத்த கடனை திருப்பி கேட்ட சாமியரை காவல் துறையில் சிக்க வைத்த பலே பெண்மணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி சாமியார் பொய்யான ரத்தின கற்களை விற்பனை செய்ததாக பெண் குற்றம் சாட்டிய நிலையில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் திருமணம் ஆகாத நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள குளத்தின் கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் சிறிய அளவில் நாகராஜா கோவில் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்துள்ளார். இவரது கோவிலுக்கு அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. சுரேஷ் குமாரும் குறி சொல்வது, பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க பூஜை, பரிகாரங்களையும் ஒரு சாமியார் போல் இருந்து செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த கோவிலுக்கு அவ்வபோது வரும் 25-வயது இளம்பெண் ஒருவர் சாமியார் சுரேஷ்குமார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நான் ஒரு நாக அவதாரம் என கூறி பல லட்சம் மதிப்புள்ள பாம்பு முத்துக்கள் நவரத்தின கற்கள் தன்னிடம் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு போலி கற்களை கொடுத்து ஏமாற்றி வருவதாகவும் தன்னிடமும் லட்ச கணக்கில் விலை உயர்ந்த வாட்ச்களை பெற்றுக்கொண்டு போலி கற்களை தந்து ஏமாற்றி விட்டார். எனவே சாமியார் சுரேஷ்குமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருக்கும் அசோக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆண்லைன் மூலம் புகாரளித்தார். இந்த மோசடி சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் கண்காணிப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதன் கிழமை சாமியார் சுரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3-பிரிவுகளின் கீழ் இரணியல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமர் ஐ கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சாமியார் மீது மோசடி புகாரளித்த தம்மத்து கோணத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2-ஆண்டுகளுக்கு முன்பே கணவர் சனத் மற்றும் குடும்பத்தினருடன் சுரேஷ்குமார் நடத்தும் கோயிலுக்கு வந்து செல்வதும் அந்த நாகராஜா கோயிலில் சனத் ம் சாமியாடி குறி சொல்லி வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் குடும்ப நண்பர்களாக மாறி ஒன்றாக கோயிலை நடத்தி வந்ததும் கப்பலில் பணியாற்றும் சனத் ஒரு கட்டத்தில் வீடு கட்டுவதற்க்கு சுரேஷ்குமாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்றதும் தெரியவந்தது.
கடந்த டிசம்பர் மாதம் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவின் போது சுரேஷ்குமாருக்கும் சனத் க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சுரேஷ்குமார் தான் கடனாக கொடுத்த பணத்தை சனத் இடம் திரும்ப கேட்டதோடு இருவரும் பரஸ்பரம் ஒருவொருக்கு ஒருவர் பரிமாறிய பரிசு பொருட்களை திரும்ப கொடுத்துள்ளனர்.
ஆனால் சனத் தான் வாங்கிய கடன் தொகையை சுரேஷ்குமாருக்கு சரிவர திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் சனத் சுரேஷ்குமாரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு யுவர் கவுண்டவுண் ஸ்டார்ட் நவ் என மேசேஜ் அனுப்பியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
மூதாட்டியை கொலை செய்து குவளையில் அடைத்து வைத்த பேத்தி கைது
இதனையடுத்து அந்த இளம்பெண்ணையும், காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்தியதில் சுரேஷ்குமார் கூறிய தகவல்கள் உண்மை என்பதும் கணவர் வாங்கி கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால் அவரை ஏதாவது வழக்கி சிக்க வைக்க வேண்டும் என இருவரும் திட்டம் தீட்டி சாமியார் மீது பாம்பு முத்து மோசடி புகாரளித்தால் எளிதாக சிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் ஆண்லைன் புகாரளித்து அதை பத்திரிகைகளுக்கு கொடுத்து விளம்பரபடுத்தியதாகவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் மர்ம மரணம் - காவல் துறை விசாரணை
இதனையடுத்து அந்த இளம்பெண்ணை இரணியல் காவல் துறையினர் எதிர்கால நலன் கருதி எச்சரித்து மேல் நடவடிக்கை தேவையில்லை என எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சாமியாரை கைது செய்து மோசடி வழக்கை விசாரித்த குளச்சல் டி.எஸ்.பி தங்கராமனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது இளம்பெண் கொடுத்த புகாரில் உள்ள மோசடி குற்றச்சாட்டுக்களில் முகாந்திரம் இல்லை எனவும் அதனால் சாமியார் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடுவித்துள்ளதாகவும் இளம்பெண்ணை விசாரித்து அனுப்பி வைத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.