Asianet News TamilAsianet News Tamil

குமரியில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரற்ற நிலையில் பிறந்த குழந்தைகள் - உறவினர்கள் கதறல்

கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறை அருகே கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

public allegations against private hospital in kanyakumari for wrong treatment for pregnant lady
Author
First Published Aug 3, 2023, 12:12 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. இவரது கணவர் மெல்கி வெளிநாட்டில் பணியில் உள்ளார். ரஞ்சிதா  கருவுற்ற நிலையில், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவருக்கு திருப்பதிசாரம் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் சிசுக்களின்  வளர்ச்சி குறித்து பரிசோதனை செய்யப்பட்ட போது, இரண்டு கரு இருப்பதாகவும், அதில் ஒன்று வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பரிசோதனை முடிவு வந்ததாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வளர்ச்சி குறைந்த கரு இருப்பதால் தாய்க்கும், மற்றொரு கருவிற்கும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, வளர்ச்சி குறைபாடுள்ள சிசுவை  கருவிலேயே அழித்து விடலாம் எனவும், அதற்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் ஊசி போட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஊசியும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 31ம் தேதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்த ரஞ்சிதா மற்றும் அவரது உறவினர்களிடம் தாயும், சேயும்  நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

முதல்வர் ரங்கசாமிக்கு ஆழ்கடலில் பேனர் பிடித்த ஆதராவளர்கள்; வீடியோ இணையத்தில் வைரல்

ஆனால் நேற்று திடீரென ரஞ்சிதா வயிற்று வலி ஏற்பட்டு கழிவறை செல்லும் போது, அங்கேயே இரு சிசுக்களும் உயிரிழந்த நிலையில் நச்சுகொடியுடன் வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்ணையும், இறந்த இரண்டு  சிசுக்களையும் எடுத்து வந்தும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக எந்த வித சிகிச்சையும் அளிக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இளைஞருடன் நிர்வாண உரையாடல்; இளம் பெண் கதறல் - போலீஸ் வலைவீச்சு

மேலும் 20 ஆயிரம் ரூபாய் மருத்துவ செலவு என ரசீதும் கொடுத்துள்ளனர். ஏற்கனவே ஒரு சிசுவை உசி மூலமாக அழித்துவிட்டோம் என கூறிய நிலையில் அந்த சிசுவும் இறந்தநிலையில் வெளியே வந்ததால் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியபோக்காலும், கவனகுறைவாலும் இரண்டு சிசுக்கள் இறந்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள், மருத்துவமனையை முற்றுக்கையிட்டு மருத்துவர்களிடம்  வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். 

தொடர்ந்து அங்கு வந்த கோட்டார் காவல் துறையினர் இது தொடர்பான புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios