Asianet News TamilAsianet News Tamil

இந்து முறைப்படி நடந்த கருணாநிதி சிலை அடிக்கல் நாட்டுவிழா... அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சர்ச்சை!!

கருணாநிதியின் திரு உருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, இந்து முறைப்படி நடைபெற்றது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

foundation stone ceremony for karunanidhi statue was held in hindu style
Author
First Published Oct 20, 2022, 7:19 PM IST

கருணாநிதியின் திரு உருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, இந்து முறைப்படி நடைபெற்றது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலக வளாகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இந்து மத சடங்குகளுடன் நடைபெற்றது. இதில், ஓம் சக்தி பராசக்தி என்ற முழக்கத்துடன் அடிக்கல் நாட்டப்பட்டது. திமுகவின் மூத்த தொண்டரான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆபேல் அடிக்கல் நாட்டினார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவராக வாய்ப்பு வந்தும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்.

குமரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகர மேயருமான மகேஷ் மற்றும் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் மற்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக அலுவலக வளாகத்தில் மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெற்ற கருணாநிதியின் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில், திமுக தலைமைக்கு தெரிந்து தான் ஒரு மதம் சார்ந்த சடங்குகள் நடைபெற்றுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை.. தற்கொலை என ஓப்புக் கொள்ள சொல்லி டார்ச்சர்.. கதறும் ஸ்ரீமதி தாயார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தருமபுரி எம்பி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இந்து மத சடங்குகளோடு நிகழ்ச்சி நடைபெற்றதால், மற்ற மதங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இந்த நிலையில் இந்து மத சடங்குகளோடு நடைபெற்ற கருணாநிதி சிலை அடிக்கல் நாட்டு விழா, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios