கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணத்தின் போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பிறர் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை குளத்தில் இறக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜகதாஸ் (வயது 50). பல்லவிளை பகுதியில் குழித்துறை ரயில் நிலையத்தில் இன்று காலையில் ரயிலில் வந்து இறங்கிய பெண் பயணியை தனது ஆட்டோவில் ஏற்றி பெண் பயணியின் வீட்டுக்கு பல்லன்விளை - மார்த்தாண்டம் கிறிஸ்டல் பிரஸ் சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

4 மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி மேற்கூரை; அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு 

மாரடைப்பு ஏற்பட்ட போது ஆட்டோ நல்லூர் குளத்தின் அருகில் சென்று கொண்டு இருந்ததால் ஆட்டோ ஓட்டுனர் பயணியிடம் ஆட்டோவில் இருந்து குதிக்க கூறியுள்ளார். அப்போது அந்த பெண் பயணி ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார் அதன் பின்னர் ஆட்டோ நல்லூர் செம்பத்தடி குளத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்து அங்கு நின்ற பொதுமக்கள் ஓடி வந்து சிறு காயங்களுடன் நின்ற பெண்மணியை இன்னொரு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் இந்த பெண் மணி நடந்த சம்பவங்களை பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விபத்து நடந்த உடனே அங்கு நின்ற சிலர் குளத்தில் குதித்து அரைமணிநேரம் போராடி தண்ணீருக்கு அடியில் ஆட்டோவில் சிக்கி இருந்த ஓட்டுனரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர் அவரை பரிசோதனை செய்தபோது அவர் உயிர் இழந்ததாக கூறியுள்ளனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.