ஷாக்கிங் நியூஸ்.. நாளை பணியில் சேர இருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலி.. திருமணமான ஒரே மாதத்தில் சோகம்.!

கன்னியாகுமரியில் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Army soldier died of heart attack within one month of marriage in kanyakumari

கன்னியாகுமரியில் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள பிச்சவிளையைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன்(32). இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 21-ம் தேதி பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. சரவணன் மீண்டும் பணியில் சேர்வதற்காக நாளை கன்னியாகுமரியில் இருந்து பணிக்கு செல்வதாக இருந்தது. 

இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்! ஒரே நேரத்தில் சீரிய 3 குண்டுகள்! சிதறிய மூளை! ரத்த வெள்ளத்தில் விமானப்படை வீரர் பலி.!

இந்நிலையில், வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, அவரை உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தனது கணவர் உயிரிழந்த செய்தியை அறிந்த மனைவி அழுது கதறி துடித்தார்.

இதையும் படிங்க;-  கட்டிய தாலியின் ஈரம் கூட காயலையே.. என்ன விட்டு போயிட்டியே மாமா.. நெஞ்சில் அடித்து கதறிய இளம்பெண்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios