மது போதையில் மனைவியின் கழுத்தை அறுத்த இராணுவ வீரர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் மனைவியின் கழுத்தை அறுத்த இராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காந்திநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 47). இவரது மனைவி சுபிதா (39) ஜெயராஜ் 23 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயராஜ் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போது எல்லாம் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.
ஜெயராஜிற்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயராஜ் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதிலிருந்து குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். கடந்த வாரம் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு மனைவி மற்றும் பெண் குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார்.
பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநரை அண்ணன்களை ஏவி விட்டு நையப்புடைத்த கல்லூரி மாணவி
இதுகுறித்து மனைவி சுபிதா ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், நான் இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று கணவன் ஜெயராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நடை பயணத்தின் போது அண்ணாமலை உணவகத்தில் இளைப்பாறிய அண்ணாமலை
இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த ஜெயராஜ் அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுபிதாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசாரிபள்ளம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தனர்.