தெருவில் குப்பையை கொட்டிய நபரை சிசிடிவி மூலம் கண்டுபிடித்து நூதன தண்டனை வழங்கிய மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு பகுதியில் இருந்து ஆட்டோவில் எடுத்து வந்து குப்பையை கொட்டிச் சென்ற நபரை அப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கண்டறிந்து மீண்டும் அவரை வரவழைத்து குப்பையை அள்ளிச் செல்ல வைத்தனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குப்பைகளை ஆட்டோவில் ஏற்றி வந்து கொட்டி செல்லும் மர்ம நபரை பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பிடித்து நேரில் வரவழைத்து கொட்டி சென்ற கழிவுகளை மீண்டும் எடுத்து செல்ல வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் உதிநின்றவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்த பகுதி பிரதான சாலையின் உட்பக்கம் என்பதால் ஏராளமான சமூக விரோதிகள் பிளாஸ்டிக் கழிவுகள், உணவக கழிவுகள் உள்ளிட்டவற்றை இரவு நேரத்தில் வாகனங்களில் எடுத்து வந்து இந்த பகுதியில் கொட்டி சென்று வந்தனர்.
புதுவையில் 11 பேர் கொண்ட கஞ்சா மாஃபியா கும்பல் அதிரடி கைது
இதனால் இந்த பகுதியில் கழிவுகள் அதிகமாகி மழைகாலத்தில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களின் தொந்தரவு அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பையை கொட்டி செல்லும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
புதுச்சேரியில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்; சுனாமி அச்சத்தில் வீடுகளை காலி செய்யும் மீனவர்கள்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பயணிகள் ஆட்டோ ஒன்றில் மர்ம நபர் ஒருவர் அதிக அளவு குப்பைகளை ஏற்றி வந்து அந்த பகுதியில் வீசி சென்றுள்ளார். இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட அந்த பகுதி மக்கள் ஆட்டோ ஓட்டுநரை இன்று காலை நேரில் சென்று அழைத்து வந்து வீசி சென்ற கழிவுகள் கலந்த குப்பைகளை அந்த பகுதியில் இருந்து எடுக்க வைத்து ஆட்டோவில் ஏற்றி திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.