நள்ளிரவில் வேறொருவர் மனைவியுடன் அதிமுக மாஜி உல்லாசம்.. மகளின் மேயர் கனவில் மண்ணைவாரி போட்ட தந்தை..!

முன்னாள் அதிமுக எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசனுடன் அவரது மனைவி விஜயஸ்ரீ  உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ந்துப்போனார்.  ஜன்னல் உடைக்கும் சத்தம் கேட்டு  வீட்டு கதவை திறந்து வேகமாக வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தகாத வார்த்தைகளால் திட்டி குமாரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

AIADMK ex-mla nanjil murugesan illegal relationship

தன் மகள் தேர்தல் களத்தில் இருக்கும் நிலையில், வேறொருவர் மனைவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அதை தட்டிக்கேட்ட கணவரை முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியான குமாருக்கு திருமணமாகி விஜயஸ்ரீ என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  வேலைக்கு சென்ற குமார் கடந்த 11-ம் தேதி இரவு வேலையை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார்.  வீட்டின் முன்பு கார் ஒன்று நின்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அவரது வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால் என்னானதோ? ஏதானதோ என சந்தேகம் அடைந்து ஓடி வந்து கதவை பலமுறை தட்டியுள்ளார். ஆனால், மனைவி விஜயஸ்ரீ திறக்காத நிலையில் சந்தேகமடைந்து அறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். 

இதையும் படிங்க;- தலைக்கேறிய போதை.. புதருக்குள் வைத்து இளம்பெண்ணை புரட்டி எடுத்த இளைஞர்கள்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.!

AIADMK ex-mla nanjil murugesan illegal relationship

முன்னாள் அதிமுக எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசனுடன் அவரது மனைவி விஜயஸ்ரீ  உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ந்துப்போனார்.  ஜன்னல் உடைக்கும் சத்தம் கேட்டு  வீட்டு கதவை திறந்து வேகமாக வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தகாத வார்த்தைகளால் திட்டி குமாரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

இதில் காயமடைந்த  குமார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக  இரணியல் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். அதில், தான் கூலி வேலை செய்து வருவதாகவும் எனது மனைவி விஜயஸ்ரீக்கும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார். சம்பவத்தன்று நான் அவர்கள் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்ததால் ஆத்திரமடைந்து நாஞ்சில் முருகேசனும் அவரது டிரைவர் மகேஷ் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

AIADMK ex-mla nanjil murugesan illegal relationship

புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் நாஞ்சில் முருகேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தன் மகள் ஸ்ரீலிஜாவை நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் களம் இறக்கியுள்ளார். மேலும் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது. தன் மகள் தேர்தல் களத்தில் இருக்கும் நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவரின் கணவரைத் தாக்கியதாக இரணியல் காவல் நிலையத்தில் நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios