தலைக்கேறிய போதை.. புதருக்குள் வைத்து இளம்பெண்ணை புரட்டி எடுத்த இளைஞர்கள்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.!
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன. இதனால், பதறிப்போன பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில், மரங்கள் நிறைந்த புதர் மண்டிய பகுதியில் சடலமாக அந்த பெண் இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி, சதீஷ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், போதையில் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த வழக்கில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த நபரையும் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.