அத்திவரதரை தரிசிக்க வரு வோருக்கு பால், பழம், பிஸ்கெட் கொடுக்கிறோம் என்பது மதச்சார் பின்மைக்கு உகந்ததா? மதமற்றோர் கூடும் மாபெரும் கூட்டத்திற்கு இப்படிக் கொடுப்பார்களா என்ற கேள்வி எழாதா? மதச்சார்பின்மை என்பதை அரசு அதிகாரிகள் கேலிக் கூத்தாக்குவதா?   கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் காலூன்ற தொடர் முயற்சிகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம்' என்ற பெயரில் (முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். பின்னணியில்தான்) இதுபோன்ற ஏற்பாடுகள் - இந்துப் பண்டிகைகள், திரு விழாக்கள், கும்பாபிஷேகங்கள் என்ற பெயரிலும், பெண்களை ஈர்க்க - பக்திப் போதையூட்ட - திருவிளக்கு பூஜை, தாலிக் குப் பாதுகாப்பு என்றெல்லாம் கூறி, திரு மணமான பெண்களுக்கு (மாங்கல்யப் பாது காப்பு), திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம்  என்றெல்லாம் பக்தி மூடநம்பிக்கைகளைப் பரப்புதல்,  கிராமப் புறங்களில் ஜாதிக் கலவரங்களை ஏற்படுத்தி, அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் போன்ற பல வித்தைகளிலும், வியூகங் களிலும் ஈடுபட்டு, தாங்கள் தமிழ்நாட்டில் காலூன்றலாம் என்று தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எங்கே இந்துக் கோவில் திருவிழாக்கள் நடந்தாலும், அங்கே ஆர்.எஸ்.எஸ். காவிக் கொடிகளைக் கட்டிவிடுவதும், அங்கே பக்தர்களுக்கு உதவுவதுபோன்று ஊடுரு வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, கட்சி வளர்ச்சிக்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!

ஆனால், இதற்கு அரசுகள் - அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, செக் குலேர் கொள்கைக்கு முற்றிலும் எதிராக,  இந்துத்துவா கட்சியும், ஆட்சியும் மொத் தத்தில் ஒன்று என்பது போன்ற, கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி நடந்து கொள்ள லாமா?

அத்திவரதரைப்பற்றி புருடாக்களைப்  புளுகும் ஊடகங்கள்!

அத்திவரதர் படும்பாடு அசல் கேலிக் கூத்து; 40 ஆண்டுகளாகத் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் ஒரு மரக்கட்டையை கடவுளாக்கி, பக்தி  மகாத்மியம் கற்பித்து, ஊடகங்களும் சற்றும் வெட்கமின்றி, எழுந்தருளினார்'', பச்சைப் பட்டாடை உடுத்தினார்'', நீல நிறத்தில் காட்சியளித்தார்'' என்றெல்லாம் புருடாக்களை நெஞ்சாரப் புளுகிய வண்ணம் உள்ளனர்!

தனது பக்தர்களைக் காப்பாற்ற முடியாத அத்திவரதர் யாருக்கு அருள்பாலிக்கப் போகிறார்?

எவ்வகையில் மதச்சார்பின்மைக்கு உகந்தது?

அரசமைப்புச் சட்டத்திலுள்ள 51-ஏ(எச்) பிரிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மையை போதிக்கவேண் டும் என்ற அடிப்படைக் கடமையை நிறைவேற்றவேண்டிய அரசும், அதன் தலைமைச் செயலாளரும், மூத்த அதி காரிகளும் வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, சட்டம் - ஒழுங்கு பாதுகாப் பின்கீழ் அவர்களால் நியாயப்படுத்தக் கூடும்.

ஆனால், பால் கொடுக்கிறோம்; பழம் கொடுக்கிறோம்; பிஸ்கெட் கொடுக்கிறோம் என்று அறிவிப்பது எவ்வகையில் மதச்சார் பின்மைக்கு உகந்தது?

மதமற்றோர் கூடும் மாபெரும் கூட்டத்தினருக்கும் இப்படிக் கொடுப்பார்களா?

நாளைக்கு வேளாங்கண்ணி பக்தர்களுக் கும், நாகூர் தர்காவுக்கு வருபவர்களுக்கும், மதமற்றோர் கூடும் மாபெரும் கூட்டத்தின ருக்கும் இப்படிக் கொடுப்பார்களா? என்ற கேள்வி எழாதா?

எந்தப் பணத்தில் இந்தச் செலவினம் வரும்? மக்கள் வரிப் பணம், அரசுப் பணம் இப்படி இந்துத்துவாவைப் பரப்பச் செல வழிப்பது எவ்வகையில் உகந்தது? அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது அல்லவா?

தலைமைச் செயலாளருக்கும் நல்லதல்ல; தமிழக அரசுக்கும் நல்லதல்ல!

தலைமைச் செயலாளர் நீண்ட அனுபவம் உள்ள ஒரு நேர்மையான அதிகாரி; அவர் இப்படி  ஒரு பக்கம் - இந்துத்துவா பக்கம் சாய்வதுபோல் தோற்றத்தை உருவாக்குவது, அவருக்கும் நல்லதல்ல; தமிழக அரசுக்கும் நல்லதல்ல.

மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான் மையைப் பரப்பும் அடிப்படைக் கடமை களை (51 -ஏ(எச்) பிரிவு அரசமைப்புச் சட்டத்தில்) காலில் போட்டு மிதித்து, இப்படி நடந்துகொள்வது கூடாது! போராட்டம் வெடிக்கும் என்பது உறுதி!

தமிழக முதல்வரும், அரசும் அனுமதிக்கலாமா?

மதச்சார்பின்மை என்பதை  அரசின் அதிகாரிகள் கேலிக் கூத்தாக்குவதா?

பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரிகள் புதிதாக பதவி உதவி பெற்ற ஒருவர் முயற்சியால் தினமும்கூடி பிராமணர் சங்க நடவடிக்கைகள், திட்டங்களைத் தீட்டு வதும், லஞ்ச் ஹவர் (Lunch Hour) மதிய சாப்பாட்டு நேரத்தில், அந்தப் பணிகள் நடைபெறுவதாக ஏடுகள் எழுதுகின்ற தகவல் உண்மையாக இருப்பின், அதனை தமிழக முதல்வரும், அரசும் அனுமதிக்க லாமா?

'ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாகக்' காட்டிக் கொள்வது நல்லதல்ல!

அரசியலில் எதுவும் நிலையானது, இறுதியானது என்று எண்ணி, கொள்ளிக் கட்டையை எடுத்து எவரும் தலையைச் சொறியும் நிலைக்கு ஆளாகக்கூடாது. அதிகாரிகள் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாகக்' காட்டிக் கொள்வது அவர்களுக்கு நல்லதல்ல! எனக் கூறியுள்ளார்.