அத்திவரதரை வம்புக்கிழுத்து மானாவாரியா அசிங்கப்படுத்தும் வீரமணி...
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சீபுரத்தில் அத்திவரதன் பிரசன்னம் என்று கூறி பெரிய அளவில் விளம்பரம் செய்து, பக்தி வியாபாரம் செய்துவரும் நிலையில், அத்திவரதர் பிரசன்னம் நடக்கும்பொழுதெல்லாம் மழை கொட்டும் என்ற பொய்யான பரப்புரைக்கு மாறாக, ஆய்வின் அடிப்படையில் 1854 முதல் இந்தக் காலகட்டம்வரை மழை பெய்த தில்லை என்று நிரூபித்துள்ள சூழியல் ஆய்வாளர் உண்மையை வெளிப்படுத்தியதால் கோபம்கொண்ட பிற்போக்காளர்கள், அவர்மீது அவதூறுகளை வீசுவதும், அச்சுறுத்துவதும் தொடர்ந்த நிலையில், பதிவிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார் என கி.வீரமணி கண்டித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சீபுரத்தில் அத்திவரதன் பிரசன்னம் என்று கூறி பெரிய அளவில் விளம்பரம் செய்து, பக்தி வியாபாரம் செய்துவரும் நிலையில், அத்திவரதர் பிரசன்னம் நடக்கும்பொழுதெல்லாம் மழை கொட்டும் என்ற பொய்யான பரப்புரைக்கு மாறாக, ஆய்வின் அடிப்படையில் 1854 முதல் இந்தக் காலகட்டம்வரை மழை பெய்த தில்லை என்று நிரூபித்துள்ள சூழியல் ஆய்வாளர் உண்மையை வெளிப்படுத்தியதால் கோபம்கொண்ட பிற்போக்காளர்கள், அவர்மீது அவதூறுகளை வீசுவதும், அச்சுறுத்துவதும் தொடர்ந்த நிலையில், பதிவிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார் என கி.வீரமணி கண்டித்துள்ளார்.
அத்திவரதன் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் காலத்தில் எல்லாம் தமிழகத்தில் மழை பெய்து பஞ்சம் நீங்கும் என்று கதை விடப்பட்டுள்ளது. இவ்வாறு பரப்பப்பட்டு வரும் போலியான தகவலை தகுந்த சான்றுகளோடு தமிழ்நாடு வெதர்மேன் என்ற காலநிலையை அறிவியல் பூர்வமாக துல்லியமாக கணித்துக் கூறும் தமிழ்நாடு சூழியல் ஆர்வலர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது முகநூல் பதிவில் ஊடகம் மற்றும் பழைய ஆவணங்களில் இருந்து 18.8.1854, 13.6.1892, 12.7.1937 மற்றும் 02.07.1979 ஆகிய ஆண்டுகளில் அத்தி வரதன் சிலையை வெளிக்கொண்டுவந்த காலகட்டம் மற்றும் தற்போது 01.07.2019 காலத்தில் மழை பதிவுகள் குறித்து பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கையை ஏற்றும் சான்றுகளோடு பதிவு செய்துள்ளார்.
”மேற்கண்ட ஆண்டுகளில் பெய்த மழையை ஆய்வு செய்த. நான் அக்கால கட்டத்தில் மழைப்பொழிவுகள் குறித்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், சென்னையைப் பொருத்தவரை தென் கிழக்கு பருவமழையின் காரணமாக நல்ல மழைபெற்றுக் கொண்டே இருந்துவந் துள்ளது, இருப்பினும் இடை இடையே மழையின்மையை சந்தித்துள்ளது. மழைப் பொழிவு குறித்த என்னுடைய கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளது, அத்திவரதன் குறித்தும் அதுதொடர்பான மழைப்பொழிவு குறித்தும் நான் சான்று களோடு எழுதிய போது என்னுடைய பதிவுகள் தடைசெய்யப்பட்டன, மோச மானது என்று புகார் அளிக்கப்பட்டது. அது குறித்து நான் கவலைப்படவில்லை. நான் அறிவியல் ஆய்வுகளோடு பல்வேறு சான்றுகளை வைத்து என்னுடைய முடிவு களைத் தெரிவிக்கிறேன். என்னை மதித் தால் நான் மதிப்பேன். ஆனால் என்னுடைய ஆய்வின் முடிவுகளை மாற்றிக்கூறச் சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.
மழை வரும் என்பதும் பொய்யானது
சான்றுகளின் முடிவின் படி அத்தி வரதனை தண்ணீரிலிருந்து தூக்கி வெளியே வைத்த 1854 மற்றும் 1892 இரண்டு ஆண்டுகளும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை தமிழகம் சந்தித்துள்ளது, அதே போல் கடைசி 1979-ஆம் ஆண்டிலும் தமிழகத்தில் மழை குறைவாகவே இருந்தது. ஒரே ஒரு ஆண்டு அதாவது 1937-ஆம் ஆண்டு மட்டும் நல்ல மழை இருந்தது, 1933 ஆம் ஆண்டிலிருந்து அதாவது 7 ஆண்டுகள் தொடர்ந்து நல்லமழையைத் தமிழகம் பெற்றுள்ளது, ஆகவே மழைக்கும் அத்திவரதனை குளத்தில் இருந்து தூக்கி வெளியே வைப்பதற்கும் தொடர்பில்லை. மேலும் இவர்கள் கூறும் அத்திவரதன் வெளியே வரும் ஆண்டுகள் எல்லாம் தண்ணீர்பஞ்சம் தீரும் நல்ல மழை வரும் என்பதும் பொய்யாகிப்போனது.''
ஆய்வின் அடிப்படையில் விஞ்ஞானப் பார்வையில் சூழியலில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சமுகவலை தளத்தில் இதனைப் பதிவிட்ட நிலையில், அவரை பிற்போக்குவாதிகளும், சங் பரிவார்களும், காவிகளும், கடவுளை யும், மூடநம்பிக்கைகளையும் வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும், பக்தியின் மூலம் பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சூழ்ச்சிக்காரர்களும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து சமுக வலைதளங்களில் தாக்கு வதும், அச்சுறுத்துவதும் விஞ்ஞானத்தின் முன் அவர்கள் மண்டியிட்ட உண்மை யைத்தான் வெளிப்படுத்துகிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 51-ஏ(எச்) அத்தியாயப் பிரிவில் அறிவியல் மனப் பாங்கைப் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும். அதைச் செய்த அவரை பாராட்டுவதற்குப் பதில் வசைபாடுவதா? அச்சுறுத்துவதா? என்னே, கொடுமை!
மதவாதக் கண்ணோட்டத்துடன் பிற் போக்குவாதிகளின் தரம் தாழ்ந்த போக்கு கண்டிக்கத்தக்கது. இங்கே விஞ்ஞான கருவிகள் பெரும் பாலும் அஞ்ஞானத்தைப் பரப்பும் குப்பைத் தொட்டிகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன.
ஆட்சியாளர்களே புராண சகதியில் மூழ்கிக் கிடக்கும்போது, அவர்களின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் இப்படித்தான் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். ஆனாலும், அறிவியல்தான் வெல்லும். அச்சமின்றி ஆய்வின் அடிப்படையில் துல்லியமாக உண்மையைப் போட்டுடைத்த ஆய்வாளருக்கு நமது வாழ்த்துகள், பாராட்டுகள்! எனக் கூறியுள்ளார்.