காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர், கடந்த ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் . 31 ம் தேதி வரை சயன கோலத்தில் இருந்தவர் , ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் . நாளையொடு பொது தரிசனம் முடிந்து 17 ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க படுவார்.

இந்த நிலையில் தான் தற்போது நின்ற கோலத்தில் இருக்கும் அத்திவரதர் சிலையின் முகத்தில்  வியர்த்து கொட்டுவதாக தகவல் பரவி வருகிறது . இதனால் அத்திவரதரை விரைந்து அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முதியவர் ஒருவர் கூறும்போது , கோவில் மண்டபத்தில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக இவ்வாறு வியர்க்க கூடும் என்றார் .