Rowdy Padappai Guna: சீட்டுக்கட்டாக சரியும் படப்பை குணாவின் சாம்ராஜ்ஜியம்.. வளைச்சு வளைச்சு ஆப்பு..!
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி படப்பை குணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டதில் இருந்து தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. படப்பை குணாவின் கூட்டாளிகள் அவருக்கு உதவி செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு சொந்தமான 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மற்றொரு அதிரடியாக படப்பை குணாவால் காஞ்சிபுரம் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்நிலைகள், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் மீட்டனர். குளத்தை மூடி விவசாய நிலமாக மாற்றி பயிர் செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, 3 இயந்திரம் மூலமாக நிலத்தை அப்புறப்படுத்தி சமநிலை படுத்தி மீண்டும் குளமாக மாற்றும் பணியை தொடங்கியுள்ளனர்.