ஆக்சிஜன் பற்றாக்குறை... செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துடிதுடித்து உயிரிழந்த 11 கொரோனா நோயாளிகள்..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நள்ளிரவில் அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நள்ளிரவில் அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,000ஐ தாண்டியுள்ளது. இதில், செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூரில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில், பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கொரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.