Asianet News TamilAsianet News Tamil

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை.. செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் தகவல்..!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 

None of the patients died due to lack of oxygen... chengalpattu district collector
Author
Chengalpattu, First Published May 5, 2021, 12:08 PM IST

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கொரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

None of the patients died due to lack of oxygen... chengalpattu district collector

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மருத்துவமனையில்  போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக  உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆக்சிஜன் விநியோகத்தில் இருந்துவந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. 

None of the patients died due to lack of oxygen... chengalpattu district collector

உயிரிழந்த நோயாளிகளில் ஒருவர் மட்டுமே கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஏனையோர் வயது முதிர்வு மற்றும் பல்வேறு நோய் பாதிப்பு உள்ளானவரகள். 13 பேர் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios