Kanchipuram: காஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு; மூதாட்டி பலி

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஒரே கிராமத்தில் திடீரென பலருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More than 10 people fell ill at the same time in Kanchipuram, one old lady died vel

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் திடீரென நேற்று முதல் கிராம மக்கள் பலக்கும் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மூதாட்டி ஒருவர் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதி முழுவதுமே தொற்று நோய் ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ என பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை விநியோகம் செய்து வருகின்றனர்.

Theft: ரூ.10 ஆயிரம் கடனுக்காக ஆட்டோவை திருடிச் சென்ற பாஜக பிரமுகர் - கன்னியாகுமரியில் பரபரப்பு

மேலும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து கிராமம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடுக்கி விட்டுள்ளார். மேலும் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

பெண்களை பார்த்ததும் நிற்காமல் சிட்டாக பறக்கும் அரசு பேருந்துகள்; பேருந்தை சிறை பிடித்த மக்களால் பரபரப்பு

இந்நிலையில் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அனைத்தும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு குளோரின் கலக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் பிரச்சினை காரணமாக இந்நிலை ஏற்பட்டு இருக்குமோ என பொதுமக்கள் அச்சப்படும் நிலையில் குடிநீரையும் பரிசோதனை செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios