Asianet News TamilAsianet News Tamil

அத்திவரதரை காண வராத மோடி .. சென்னை வந்தும் காஞ்சிபுரம் செல்லாத அமித்ஷா .. காரணம் என்ன தெரியுமா ??

48 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தை காண பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவில்லை . அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது .

modi and amithsha  didnt come for athivarathar dharishan
Author
Tamil Nadu, First Published Aug 20, 2019, 3:50 PM IST

1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே  சென்றது  . 4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . 

modi and amithsha  didnt come for athivarathar dharishan

குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

அத்திவரதர் வைபவத்தை காண பிரதமர் மோடி வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப் பட்டது . முதலில் ஜூலை 31 இல் சயன கோலத்தில் அத்திவரதரை தரிசிக்கும் மோடி பின்னர் ஆகஸ்ட் 1 இல் நின்ற கோலத்தையும் தரிசிப்பார் என்று  அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்தன . எனினும் பிரதமர் மோடி வரவில்லை . பின்னர் ஒரு நாளில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது .

தமிழக பாஜக சார்பிலும் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம் . ஆனால் அதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிகிறது . பிரதமர் வராததற்கான காரணம் என்ன என்று விசாரித்த போது , ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பிரதமருக்கான பாதுகாப்பில் குறைபாடு ஏற்படும்  என்று கூறப்பட்டதாம் . 

modi and amithsha  didnt come for athivarathar dharishan

பிரதமருக்கும் கடந்த சில நாட்களாக அதிகமான அலுவல் பணிகளும் , பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதா பணிகளும் அதிகளவில் இருந்ததால் அவரால் அத்திவரதர் வைபவத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . 

சென்னையில்  கடந்த 11 ம் தேதி துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா  வந்திருந்தார் . ஆனால் அவரும் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்கவில்லை . புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட கர்நாடக சென்றுவிட்டார் .

Follow Us:
Download App:
  • android
  • ios