Asianet News TamilAsianet News Tamil

முதலிரவு பற்றி பெண்கள் பள்ளியில் கிளுகிளுப்பாக பேசிய திமுக. எம்.எல்.ஏ... மதுராந்தகத்தில் பரபரப்பு!!

மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற திமுக. எம்.எல்.ஏ. புகழேந்தி முதலிரவு குறித்து பேசியது மாணவிகளையும், ஆசிரியர்களையும் அங்கு கூடியிருந்த ஊர் மக்களையும் முகம் சுளிக்க வைத்தது.

MLA controversial speech at Girls high school
Author
Madurantakam, First Published Aug 21, 2019, 12:45 PM IST

மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற திமுக. எம்.எல்.ஏ. புகழேந்தி முதலிரவு குறித்து பேசியது மாணவிகளையும், ஆசிரியர்களையும் அங்கு கூடியிருந்த ஊர் மக்களையும் முகம் சுளிக்க வைத்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்று வழங்கிய  புகழேந்தி எம்.எல்.ஏ பேசியது அனைவரையும் வெறுப்பில் ஆழ்த்தியது.

அப்போது பேசிய அவர்; மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற பின் அதற்கான சான்றிதழ் பெற்ற இடம் இந்த பள்ளிக்கூடம் தான்.ஒரு பெண்ணை பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும் வாழ்வின் கடைசி காலத்திலும் அவர் நினைத்து நினைத்து பார்ப்பது முதலிரவு என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை ஆயிரம் நிகழ்வுகளில் நாம் சந்தித்தாலும் சட்டசபை உறுப்பினர் அங்கீகாரம் இப்பள்ளியில் இருந்து வழங்கப்பட்டது என்னால் மறக்க முடியாது என்று பேசினார். பள்ளியில் அதுவும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முதலிரவு குறித்து பேசியது ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஆழ்த்தியது.

எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்த காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. மரகதம் ''பள்ளி சம்பந்தமாக மட்டும் பேசுங்கள்'' என்றார். இதனால் எம்.எல்.ஏ.வுக்கும் முன்னாள் எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios