விண்ணைமுட்டில் அரோகரா கோஷம்.. கோலாகலமாக நடைபெற்ற குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்..!
கோயில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மிகப் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோயில் உள்ளது. இது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் அமைந்துள்ள முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குன்றத்தூர் முருகன் கோவில்
கோயில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மிகப் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோயில் உள்ளது. இது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
கும்பாபிஷேகம்
இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து கும்பாபிஷேகம் விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. இந்நிலையில், குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகத்தின் போது கோவில் வளாகத்துக்குள் 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட எஸ்பி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக அன்னதானம், தண்ணீர் தொட்டி, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.