இயல்பு நிலைக்கு திரும்பும் காஞ்சி !! நிறைவு பெற்ற பிரம்மாண்டமான அத்திவரதர் வைபவம் .. காஞ்சிபுரம் மக்கள் நிம்மதி பெருமூச்சு ..

48 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் கடந்த 17 ம் தேதியோடு நிறைவு பெற்றது . காஞ்சிபுரம் நகரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது .
 

kanchipuram returns to normal stage

1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

kanchipuram returns to normal stage

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே  சென்றது  . 4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

இந்த நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றது  . ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர்  தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டு  விட்டார்  .

இந்த 48 நாட்களும் காஞ்சிபுரம் மாநகரமே குலுங்கி விட்டது . சராசரியாக ஒரு நாளைக்கு 4 லட்சம் பக்தர்கள் நகருக்குள் வந்து வெளியேறி இருக்கின்றனர் . போலீசாரின் கெடுபுடி அதிகம் இருந்தது .சோதனைச் சாவடிகள் அதிகளவில் இருந்தன . இதனால் உள்ளூர் மக்கள் அதிகம் பாதிப்படைத்தனர் . நகரமும் மாசு அடைந்தது .

kanchipuram returns to normal stage

தற்போது காஞ்சி நகரம் ,கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது . போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் தூய்மை படுத்தும் பணியில் துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் . இதனால் காஞ்சி மக்கள் 50 நாட்களுக்கு பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் .

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios